கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் தெற்கு மாகாணத்தில் கடும் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக 167 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி காலி – பத்தேகம பகுதியில் பதிவாகியுள்ளது.
அதேபோல்,
களுத்துறை – வலல்லாவிட்ட பகுதியில் 132 மில்லிமீற்றர்,
காலி – வதுரவில பகுதியில் 126.40
ஆம்
எல்பிட்டியவில் 108 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ரம்புக்கனை, தெஹியோவிட்ட, மாத்தறை – வெலிபிட்டிய, எஹலியகொட, கிரியெல்ல, ஹல்துமுல்ல மற்றும் ஹொரவ்பத்தான பகுதிகளில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகங்களின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.