ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் கல்வித் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பரிவேனாதிபதி சுவாமிமார்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் (13) ஆம் திகதி நுவரெலியா சினசிட்டா நகர மண்டபத்தில் நடைபெற்றது. தீவின் அனைத்துப் பாடசாலைகளையும் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்த போதிலும், அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிக்கின்றார். “
” ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு NBRO அறிக்கைகளைப் பெறுவது கட்டாயமானது எனவும், அணுகல் வழிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், பாடசாலை செல்வது குழந்தைகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது எனவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எளிமையான உடையை அணிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் பிரதமர் இங்கு வலியுறுத்தினார். “
” பருவத் தேர்வுகள், பாடத்திட்டங்களுக்கு அப்பால் சென்று குழந்தைகளின் மனதை குணப்படுத்த முயற்சிக்குமாறும், அனர்த்தங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகளை அதிலிருந்து விடுவிக்க நெகிழ்வுத்தன்மையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் இங்கு அறிவுறுத்தினார். “
” எந்தத் தடைகள் வந்தாலும் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை அளிக்கும் பணிகள் இதுவரை 51% முடிவடைந்துள்ளதாகவும் பிரதமர் இங்கு தெரிவித்தார். “
” இந்த இயற்கைப் பேரழிவுக்குப் பிறகு நாடு இருந்த நிலையை விட, அதிலிருந்து மேலும் முன்னேறிச் செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். “
” இந்த விசேட கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சூரவீரஆரச்சி, பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கலைச்செல்வி, அனுஷ்கா திலகரத்ன உட்பட மக்கள் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மதுபானி பியசேன உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். “