2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில், நேற்று இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம், இங்கிலாந்து அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

254 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி இலங்கை அணி, 45.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி, தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.