சிறுவர்களின் சிறுவர் பராயத்தை சீர்குலைக்கும் வகையில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாக டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் சிறுவர்கள், மன அழுத்தங்களுக்கு உள்ளான வீதம் குறைவாக இருந்ததாகவும் தற்போது சமூக ஊடக பாவனைகளின் தாக்கத்தால் மன அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
எனவே விரைவில், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.