கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ‘புற்றுநோய்க்கான மருந்து’ குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை தெரிவித்துள்ளது.

இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்கவுக்கு இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத் வணிகசூரிய கடிதம் எழுதியுள்ளார்.



அதில், “இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த நம்பகமான ஆதாரங்கள் இல்லாதது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்து ‘ஊட்டச்சத்து உணவுப் பொருள்’ (Nutraceutical) என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விளம்பர அணுகுமுறை “மிகவும் தவறாக வழிநடத்துகிறது; புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உணர்ச்சிப்பூர்வ பலவீனங்களைச் சுரண்டுகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரமற்ற சிகிச்சைகள் உயர்தர சிகிச்சைகளைத் தாமதப்படுத்தி, நிதி இழப்பை ஏற்படுத்தி, அறிவியல் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் என்பதால், இந்த விவகாரம் குறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல்கலைக்கழகம் தனது நிலையை பொதுவெளியில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இலங்கை புற்றுநோயியல் கல்லூரி வலியுறுத்தியுள்ளது.

இந்த மருந்தின் விளம்பரம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்துடன் (Breast Cancer Awareness Month) ஒத்துப்போவது, புற்றுநோயியல் கல்லூரியின் விழிப்புணர்வு முயற்சிகளை மூலதனமாக்கும் முயற்சி என்றும�