வட்டவளை டீ சமீபத்தில் வெளியிடப்பட்ட “ஹிம், ஹெர் அண்ட் தெம்” என்ற குறும்படத்தை LGBTQI கருப்பொருள்களை ஊக்குவிப்பதாக பொதுமக்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து அதை நீக்கியுள்ளது.

நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த படம் “குடும்ப வாழ்க்கையின் அன்றாட உணர்ச்சிகளையும் வலிமைக்கும் உணர்திறனுக்கும் இடையிலான சமநிலையையும்” சித்தரிக்கும் நோக்கம் கொண்டது என்று கூறியது, ஆனால் “நாங்கள் ஒருபோதும் விரும்பாத வகையில் அது விளக்கப்பட்டுள்ளது” என்பதை ஏற்றுக்கொண்டது.

நுகர்வோருக்கு ஏற்பட்ட அசௌகரியம் அல்லது கவலையை குறித்து தாம் வருத்தப்படுவதாகவும், “இலங்கை குடும்பங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு மரியாதை நிமித்தமாக” படம் அதன் அனைத்து தளங்களிலிருந்தும் அகற்றப்பட்டதாகவும் நிறுவனம் கூறியது.

கருத்து தெரிவித்தவர்களுக்கு வட்டவளை டீ நிறுவனம் நன்றி தெரிவித்ததோடு, “ஒவ்வொரு கோப்பை தேநீரிலும் காணப்படும் ஆறுதல், கருணை மற்றும் தொடர்பை” கொண்டாடும் கதைகளைத் தொடர்ந்து தயாரிப்பதாகவும் கூறியது.

குடும்ப மதிப்புகள் என்ற போர்வையில் LGBTQI செய்திகளை நிறுவனம் விளம்பரப்படுத்துவதாக குற்றம் சாட்டிய பார்வையாளர்களிடமிருந்து இந்த குறும்படம் ஆன்லைன் விமர்சன அலையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.