பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நாகொட பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைத்த அவர், இது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்கள் மீது முறைப்பாடளிக்க வாய்ப்புள்ளது.

அத்துடன் ஆசிரியர்களுக்கும் இந்த நிலை ஏற்படும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார் இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.

எனினும் அவற்றை இலங்கையில் நகல் எடுப்பது கூடாது என்று கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.

எனவே இந்த விடயத்தின் மூலம் அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதை தாம் விரும்பவில்லை எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.