நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் நிலவிய கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டு நிலை குறைவடைந்துள்ளது.

குடும்பநல சுகாதார சேவைகள் பணியகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.


தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


இதன்போது, ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,173,237 சிறுவர்களின் வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, ஐந்து வயதுக்குட்பட்ட 9,542 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 7.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 10,323 என குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் சிறுவர்களே கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, புத்தளம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது 8.7 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது