2025 சாதனை நாயகனாக அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் அபிஷேக் சர்மா தனதாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்படி 331 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், அபிஷேக் சர்மா 50 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முன்னதாக 366 பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் எவின் லூயிஸ் குறித்த சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார். இந்தநிலையில் எவின் லூயிஸின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.