Window display of jewelry shop, asian bazaar
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ.8,000 அதிகரித்துள்ளது.

இன்று (07) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.290,500 ஆக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கம் பவுண் விலை
கடந்த சனிக்கிழமை, ரூ.283,000 ஆக காட்டப்பட்ட நிலையில் இவ்வாறு அதிகரித்துள்ளது.

மற்றும் ரூ.306,000 ஆக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று ரூ.314,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன