இன்று (19) இரவு நடைபெற இருந்த கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கியதும், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கியதும் ஆகிய இரு அஞ்சல் (Night Mail) ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளன.

இஹலகோட்டே (Ihalakotte) பகுதியில் ரயில்லொன்று தடம் புரண்டதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பல பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பாதை சரிசெய்த பின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்