பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கலந்துரையாடல், திகதி நிர்ணயிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சில் இன்று குறித்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது.

எனினும், பெருந்தோட்ட உரிமையாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமுகமளிக்காததால், கோரம் இன்மை ஏற்பட்டுள்ளது.

இதனால், கலந்துரையாடல் எதுவும் இன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி ஊடகங்களுக்கு தெரிவித்தார்