வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது.
சோமாவதி விகாரைக்கு சென்ற ஐனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.
அதன் பின்னர் பெயர் பலகையை திறந்த வைத்து தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய புத்தசாசன சமய அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹனிதும சுனில் செனெவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இனைந்து முறையான வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதி விகாரையை உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் நிறைவேற்றபட்டதாக தெரிவித்தார்.