கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கும் சிவப்பு நிற முட்டை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.