இதன்படி, மரணம் சம்பவித்ததற்கான உரிய காரணம், பிரேத பரிசோதனையின் பின்னரான விசாரணையில் வெளிப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்றுவந்த 23 வயதுடைய மாணவர் ஒருவர், கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவர் அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகயீனம் காரணமாக குறித்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், மாணவரின் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.