அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து ஜெர்மனி நோக்கிச் பயணித்த Lufthansa விமானம், நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரஜையொருவர் உணவு உண்ண பயன்படுத்தப்படும் உலோக ஃபோர்க்கை பயன்படுத்தி மற்றொரு நபரை தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் தோளில் தாக்கப்பட்டுள்ளதாகவும் , மற்றைய நபர் தலையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில், தாக்குதலை தடுக்க முயன்ற விமான ஊழியர் மற்றும் பயணி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் (Boston Logan International Airport) குறித்த விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுன்றது.

விமானம் தரையிக்கப்பட்ட பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.