2J Movies தயாரிப்பில் ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கண்ணம்மா‘ திரைப்படத்தின் இசை வெளியீடு . (02) பாடகர் நிரோஜனின் தேன்மதுர கீதம் இசைக்கலையகத்தில் இடம்பெற்றது.

இதில் படக்குழுவினர் பங்கேற்றதுடன், கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 04 பாடல்களையும் கலைஞர்கள் நேரலையில் பாடினார்கள்.

இந்நிகழ்வில் தில்லி கலைப்பண்பாட்டு பேரவையின் செயலாளர் பா.குமார் உம் பங்கேற்றிருந்தார்.

விரைவில் கண்ணம்மா திரைப்படம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.