இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியமையால் நேற்று இரவு முதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இன்று காலை அங்கு சென்ற கோப்பாய் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இந்த பொருள்களை மீட்டனர்.
இதேவேளை இன்று மதியம் மீண்டும் சோதனை மேற்கொண்ட போது மேலும் 2 மகசின்களும், ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் ,3 குண்டுகள், மருத்துவப் பொருள்கள், இரத்தக்கறை படிந்த ஆடை என்பன மீட்கப்பட்டதாக அறியமுடிகிறது.
மீட்கப்பட்ட பொருள்கள் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.