யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து, 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பெண் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயற்சித்தவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் நெறிப்படுத்தினர்