நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 30-ஆம் திகதி வெளியாகவிருந்த ‘கர’ திரைப்படம் தற்போது வெளியீடு விளிம்பில் ஒரு சட்டப் போராட்டத்தைச் சந்தித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஒருவர் ‘கர’ படத்தின் வெளியீடுக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:
“கரா” என்ற தலைப்பை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ‘கர’ என்ற தலைப்பு தனது பதிவோடு ஒத்துப்போவதால், தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த திடீர் வழக்கு தனுஷ் இரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் வெளியீடு உறுதியாகும்.