தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தனது திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் தன்பக்கம் திருப்பியுள்ளார். கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, இந்தப் படத்திற்காக இரசிகர்கள் தவமாய் காத்திருக்கின்றனர்.
முதலில் 2026 பொங்கல் விருந்தாக வெளியாக வேண்டிய இந்தப் படம், தணிக்கைக் குழுவின் (Censor Board) சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் சோர்வடைந்தாலும், விஜய் தனது அரசியல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், அவரது தொண்டர்களும் இரசிகர்களும் தேர்தல் களத்தில் அவருடன் கைகோர்த்து பயணித்தனர்.
தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமற்ற ஆனால் மிகவும் நம்பிக்கையான தகவல் கசிந்துள்ளது. அதன்படி:
எதிர்பார்க்கப்படும் திகதிகள்: மே 8 அல்லது மே 14
படக்குழுவினர் தற்போது வெளியீடு பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடைசிப் படம் என்பதால் தமிழகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.