BREAKING NEWS

சிறுவனின் உயிரைப் பறித்த விபத்து

PR
priya priya punidha in Latest Updates
Report
சிறுவனின் உயிரைப் பறித்த விபத்து

உடவளவ – தனமல்வில வீதியில் மலபொதுஆர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். 

பெரியல் சந்தியில் இருந்து தனமல்வில நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் நடந்து சென்ற ஒரு சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடவளவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.