அமெரிக்காவினால் ஈரானிய துறைமுகங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிய துறைமுகங்களில் எந்தவொரு கப்பல் போக்குவரத்தும் நடைபெறவில்லை என அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
“அடுத்த இரண்டு நாட்களில் முக்கிய மாற்றங்கள் நிகழலாம்” எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.