BREAKING NEWS

இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

DH
dhusanthi dhusi in வானிலை
Report
இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (15) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ வரையிலான பலத்த மழை பதிவாகக்கூடும்.

மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.